நண்பரின் தாயை மணக்க விரும்புவதாக 300 முறை கூறிய இளைஞர்.... அதற்கு அப்பெண் என்ன கூறினார் தெரியுமா?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் தனது நெருங்கிய நண்பனின் அம்மாவை தீவிரமாக காதலிக்கும் 18 வயது இளைஞர் அவரை மணக்கவுள்ளார்.

சேஸ் கேபர்ட் (18) என்ற இளைஞரும் ஜேயிஸ் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

ஜேயிஸின் தாய் ஜெயிமி பிரவுன் (39)-ஐ சேஸ் அடிக்கடி பார்த்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

தன்னை விட 21 வயது அதிகமானவர், தனது நெருங்கிய நண்பனின் அம்மா என்பதை எல்லாம் மீறி பிரவுனை சேஸ் தீவிரமாக காதலித்து வருகிறார்.

தன்னை பிரவுன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என இதுவரை அவரிடம் 300 முறை கேட்டுள்ளார் சேஸ். இதற்கு பிரவுன் ஒப்பு கொண்டார்.

இது குறித்து பிரவுன் கூறுகையில், எனக்கு ஜேயிஸ் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

நான் சேஸ்-ஐ காதலிப்பது அவர்களுக்கு தெரியும், அவர்களின் சம்மதம் தான் எனக்கு முக்கியம்.

என் முதல் கணவரை விவாகரத்து செய்ய நான் காத்திருக்க வேண்டும், பின்னர் சேஸை திருமணம் செய்து கொள்வதற்கான அழகான திட்டம் வைத்துள்ளேன்.

என்னையும் சேஸையும் ஒன்றாக பார்க்கும் போது பலரும் தாய் - மகன் என நினைத்து விடுகிறார்கள், அது குறித்து கவலையில்லை என கூறியுள்ளார்.

சேஸ் தனது நெருங்கிய நண்பர் ஜேயிஸின் தாய் பிரவுனை காதலிப்பதால் அவர்களின் நட்பில் எந்தவொரு விரிசலும் ஏற்படவில்லை, நாங்கள் எப்போதும் போல நல்ல நண்பர்களாக இருப்போம் என இருவரும் கூறியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers