உலகிலேயே மிக ஆபத்தான பறவையை வீட்டில் ஆசையாக வளர்த்து வந்த நபர்: நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

உலகிலேயே ஆபத்தான பறவையாக அறியப்படும் cassowary-ஐ வீட்டில் வளர்த்து வந்த நபரை அந்த பறவை தாக்கி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடாவை சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (75). இவர் தனது வீட்டின் பின்புறத்தில் பண்ணை வைத்துள்ளார்.

அங்கு பல்வேறு விதமான பறவைகளை மார்வின் பராமரித்து வந்தார்.

உலகிலேயே மிகவும் ஆபத்தான பறவை என ஆராயாச்சியாளர்கள் கூறும் cassowary பறவையையும் மார்வின் வளர்த்து வந்தார்.

cassowary பறவைகள் அவுஸ்திரேலியாவை பிறப்பிடமாக கொண்ட பறவை இனமாகும்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவசர உதவி எண்ணுக்கு மார்வின் வீட்டிலிருந்து சிலர் போன் செய்து உடனடியாக அங்கு வர சொன்னார்கள்.

அங்கு மருத்துவ குழுவினர் சென்ற நிலையில் படுகாயமடைந்த நிலையில் இருந்த மார்வின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். விசாரணையில் மார்வின் வளர்த்த cassowary பறவை அவரை தாக்கியதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இதனிடையில் மார்வின் தனக்கு பிடித்த விடயத்தை செய்து வந்த நிலையில் அவரின் முடிவு இப்படி அமைந்துவிட்டது என உறவினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers