100 அடி ஆழத்தில் விழுந்த அழகிய இளம்பெண்: தீராத செல்பி மோகத்துக்கு தொடர்ந்து பலியாகும் இளம்பெண்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க பல்கலைக்கழக மாணவி ஒருவர் செல்பி மோகத்தால் உயிரிழந்துள்ளார். Briar Cliff பல்கலைக்கழக மாணவியான Andrea Norton(20), மலையேற்றத்தின்போது மலை முகடு ஒன்றில் செல்பி எடுக்க முயலும்போது 100 அடி ஆழத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற Arkansas பகுதியில் அமைந்துள்ள மலை முகடு ஒன்றின் விளிம்பில் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது தவறி விழுந்து இறந்துள்ளார்.

சுற்றுச்சூழல் அறிவியல் மாணவியான Norton, தனது வகுப்பு தோழிகளுடன் மலையேற்றத்திற்கு சென்றபோது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைதான் Fordham பல்கலைக்கழக மாணவி ஒருவர் இதேபோல் செல்பி எடுக்க முயலும்போது மணிக்கூண்டு ஒன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Sydney Monfries (22) என்ற அந்த மாணவி தனது சமூக ஊடக கணக்கில் பதிவிட, புகைப்படம் ஒன்றை எடுக்க முயலும்போது 40 அடி உயரத்திலிருந்து மணிக்கூண்டின் உள்ளேயே விழுந்து உயிரிழந்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்