அமெரிக்க தேவாலயத்தில் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு கையில் துப்பாக்கியுடன் வந்த பெண் கைது

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா

அமெரிக்க தேவாலயத்தில் குழந்தையை வைத்துக்கொண்டு கையில் துப்பாக்கியுடன் வந்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

San Diego வில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு திருப்பணி நடந்துகொண்டிருக்கையில், 35 வயது பெண்மணி ஒருவர் தனது 10 மாத கைக்குழந்தையுடன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

ஆனால், அவர் வைத்திருந்த துப்பாக்கியில் குண்டுகள் இல்லை, மேலும் மோப்ப நாய் வைத்து தேடுதல் நடத்தியதில் தேவாலயத்திற்கு அருகில் எவ்வித வெடி மருந்துகளும் கண்டெடுக்கப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திற்காக அப்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சபை உறுப்பினர்கள் அந்த பெண்ணை பார்த்து, எங்களிடம் வராத எனக்கூறி அடிபணிய வைத்து, துப்பாக்கியை எடுத்துக் கொண்டனர்.

பின்னர், காவல்துறையினர் வந்து பின்னர் காவலில் வைக்க முடிந்தது" என்று சான் டியாகோ பொலிஸ் சார்ஜென்ட் ராபர்ட் ஹாக்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இப்பெண்ணால் தேவாலயத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், இங்கிருக்கும் தேவாலத்திலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என சான் டியாகோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்