இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்.. அமெரிக்காவின் எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி

Report Print Santhan in அமெரிக்கா

இலங்கையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இலங்கையில் அடுத்தடுத்து நடந்த எட்டு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால், அந்நாட்டு மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

தங்கள் உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இலங்கையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையின் முக்கிய தேவாலயங்கள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டப்பட்டு இருப்பதாக கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே, இலங்கை காவல் துறை தலைவர் எச்சரிக்கை செய்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இலங்கை காவல் துறை தலைவர் புஜன் ஜெயசுந்தரா கடந்த 11-ஆம் திகதி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், வெளிநாட்டு உளவு அமைப்பு அளித்த தகவலின்படி, தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, முக்கிய தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இந்திய உளவு அமைப்புதான் இத்தகவலை இலங்கை காவல்துறைக்கு அளித்ததாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. அதற்கேற்றார் போல் நேற்று குண்டுவெடிப்பை தொடர்ந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்