அமெரிக்க வரலாற்றிலே லொட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்ற இளைஞர்! கண்கலங்கிய தந்தை

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த 24 வயது இளைஞர் லொட்டரியில் 600 மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த மானுவல் பிராங்கோ என்கிற 24 வயது இளைஞர் 768.4 மில்லியன் டொலர்களை லொட்டரியில் வென்றுள்ளார். இந்த பரிசுத்தொகையானாது அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது மிகப்பெரிய பரிசுத்தொகை ஆகும்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்த இளைஞர், நான் 10 லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கியிருந்தேன்.

மதியம் 2 மணிக்கு என்னுடைய வேலையிலிருந்து நான் வெளியேறிவிட்டேன். மிகவும் அதிர்ஷ்டசாலி போல உணர்ந்தேன். அது வித்தியாசமான உணர்வு, இயல்பானதாக இல்லை.

நான் அனைத்து டிக்கெட்டுகளையுமே சரிபார்த்தேன். ஆனால் எந்த லொட்டரியிலும் வெற்றி பெறவில்லை. அப்பொழுது தான் இறுதியாக ஒரு டிக்கெட் மட்டும் அங்கு இருந்தது. அதனை எடுத்து சரிபார்த்த போது முதல் எண்கள் ஒத்துப்போனது.இரண்டாவது எண்கள் ஒத்துப்போனதும் எனக்கு லேசாக இதயத்துடிப்பு அதிகரித்தது. என்னுள் ஒரு வித்யாசமான உணர்வு தோன்றியது.

கடைசி எண்களும் ஒத்துபோகவே எனக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. அதனை ஒரு கனவு போல உணர்ந்தேன். ஆச்சர்யமாக இருந்தது. என்னுடைய இதயத்தில் ரத்தஓட்டம் அதிகரித்தது. 10 நிமிடங்களுக்கு விடாமல் சத்தமாக கத்தினேன்.

மகிழ்ச்சியில் என்னுடைய தந்தை கண்கலங்கி அதிகம் அழ ஆரம்பித்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக 2016ம் ஆண்டு $1.586 பில்லியன் டொலர்களை வென்றிருப்பது தான் உலகிலேயே லொட்டரியில் வென்ற அதிக தொகை ஆகும்.

அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் $1.537 பில்லியன் தொகையை வென்றிருப்பது தான் இரண்டாவது மிகப்பெரிய தொகை ஆகும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்