கூகுள் நிறுவன கட்டிடப் பணியின்போது விபத்து: கிரேன் விழுந்து நால்வர் பலி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கூகுள் நிறுவனத்தின் கட்டிடம் ஒன்றின் கட்டுமானப் பணியின்போது கிரேன் ஒன்று விழுந்து நொறுங்கியதில் நர்ஸிங் மாணவி ஒருவர் உட்பட நால்வர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Seattleஇல் கூகுள் நிறுவனத்தின் கட்டிட கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்றை பிரிக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கிரேன் விழுந்து நொறுங்கியது. சாலையில் சென்ற வாகனங்கள் மீது அந்த கிரேனின் உடைந்த பாகங்கள் விழுந்ததில் சில கார்கள் நசுங்கின.

இதில் காரில் சென்ற Sarah Wong என்ற நர்ஸிங் மாணவியும் மற்றொரு காரில் ஒன்ற ஒரு நபரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இரண்டாவது நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அத்துடன் கிரேனை பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் Andrew Yoder (31) என்னும் இரும்பு வேலை செய்பவரும் உயிரிழந்தனர்.

Andrewவுக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது என்பதும், அவருடன் உயிரிழந்த Portlandஐச் சேர்ந்த மற்ற நபருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் 25 வயது பெண் ஒருவர், அவரது நான்கு மாத குழந்தை ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

27 வயது ஆண் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது என்றாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவில் பெரிய அளவில் அவருக்கு காயங்கள் இல்லை என்பதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.

விபத்து குறித்து Seattle பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்