இலங்கை குண்டு வெடிப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை: அமெரிக்க முக்கியஸ்தர்களின் குற்றச்சாட்டுகளும் பதில்களும்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

வெள்ளை மாளிகையின் ஆலோசகர், பேட்டி ஒன்றில் இளம் அரசியல்வாதியான ஒருவர் இலங்கை குண்டு வெடிப்புகள் தொடர்பாக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்காததை விமர்சித்திருந்தார்.

வெள்ளை மாளிகையின் ஆலோசகரான Kellyanne Conway, பெரும்பாலும் ஆன்லைனில் கருத்துக்கள் வெளியிடும் Alexandria Ocasio-Cortezபோன்ற பல அரசியல்வாதிகள், இலங்கை வெடிகுண்டு தாக்குதல் குறித்து ஒருமுறை கூட கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இதனால் கோபமுற்ற Ocasio-Cortez, ட்விட்டரில் Conway தனது கிறிஸ்துவத்தைக் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து Ocasio-Cortez, இலங்கை படுகொலைகள் பயங்கரமானவை, யாரும் தங்கள் மத நம்பிக்கைக்காக தாக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர், நீங்கள் இலங்கை தாக்குதல் குறித்து அந்த அளவுக்கு கவலையடைந்திருப்பீர்கள் என்றால், மதத்தின் காரணமாக துன்புறுத்தப்படும் புலம்பெயர்வோரை நாம் வரவேற்க ஏதாவது செய்யலாமே என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில் Conway, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இலங்கையில் கொல்லப்பட்டவர்களை கிறிஸ்தவர்கள் என்று அழைக்காமல் ஈஸ்டர் ஆராதனைக்கு வந்தவர்கள் என்றே குறிப்பிட்டதையும் கடுமையாக விமர்சித்தார்.

அதற்கும் பதிலளித்துள்ள Ocasio-Cortez, ஈஸ்டர் ஆராதனைக்கு வந்தவர்கள் என்ற சொற்பிரயோகம் மிகவும் முக்கியமானது, காரணம், கிறிஸ்தவர்களுக்கு ஆண்டில் மிக புனிதமான நாள் ஈஸ்டர், அந்த நாளில் தாக்குதலுக்குள்ளாவது எவ்வளவு மோசமானது என்பதை அது காட்டுகிறது என்றார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்