அமெரிக்காவில் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர்.. 2 பேர் உயிரிழப்பு! பயத்தில் கையை தூக்கியபடி ஓடிய மாணவர்கள்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கரோலினாவில் பல்கலைக்கழகம் ஒன்றில், நடப்பு கல்வியாண்டின் கடைசி நாளான நேற்று மாணவர்கள் மகிழ்ச்சியாக வகுப்பறையில் இருந்தனர். அப்போது அங்கு படிக்கும் டிரிஸ்டான் ஆண்ட்ரூ டெர்ரல்(22) என்ற மாணவர், திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த மாணவர்களை சரமாரியாக சுட்டார்.

இதனால் மாணவர்கள் அலறியடித்து அங்கும் இங்குமாக ஓடினர். பெரும் பரபரப்பு அங்கு ஏற்பட்ட நிலையில், பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு வந்த பொலிசார், துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவரை கைது செய்தனர்.

அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்து கைகளை தூக்கியபடி மாணவர்கள் பதற்றத்துடன் வெளிவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Logan Cyrus/AFP/Getty Images

Logan Cyrus/AFP/Getty Images

Logan Cyrus/AFP/Getty Images

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்