கர்ப்பமானது தெரியாமலேயே இருந்த 13 வயது சிறுமி... கழிப்பறையில் பிறந்த குழந்தை... வெளியான பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 13 வயது சிறுமி கர்ப்பமாகி கழிப்பறையில் குழந்தை பெற்ற நிலையில் இது தொடர்பாக 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Detroit நகரை சேர்ந்த 13 வயது சிறுமி சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டின் கழிப்பறைக்கு சென்றார்.

அப்போது திடீரென சிறுமிக்கு அங்கு குழந்தை பிறந்தது, இதையடுத்து கத்தியபடியே சுயநினைவை இழந்தார் சிறுமி.

பின்னர் அங்கு ஓடி வந்த அவளின் 12 வயதான சகோதரி இதை கண்டு அதிர்ச்சியடைந்து தனது தாயிடம் கூறினார்.

இதையடுத்து அவசர உதவி எண்ணுக்கு போன் செய்யப்பட்ட நிலையில் உடனடியாக சிறுமியும் அவள் குழந்தையும் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர்.

குழந்தை மூச்சு பேச்சில்லாமல் இருந்த நிலையில் நாடித்துடிப்பும் இல்லாமல் இருந்தது.

ஆனால் தீவிர சிகிச்சையை தொடர்ந்து தாய் மற்றும் சேயை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர் டெரி கூறுகையில், கர்ப்பமாக இருப்பது தனக்கே தெரியாது என சிறுமி எங்களிடம் கூறினார். சிறுமி மிகவும் கவலையுடன், பயத்துடன் உள்ளார்.

சரியான நேரத்தில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததால் அதை காப்பாற்ற முடிந்தது என கூறினார்.

இதனிடையில் சிறுமியின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தையான 16 வயது சிறுவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்