தந்தை என நினைத்து அன்பாக பழகி வந்த மகள்.... 14 ஆண்டுகள் கழித்து டிஎன்ஏ சோதனையில் வெளியான அதிர்ச்சி உண்மை

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் வசிக்கும் இளம்பெண் தனது தந்தை என ஒருவரை நினைத்து அவருடன் அன்பாக பழகி வந்த நிலையில், அவர் அப்பெண்ணின் தந்தையில்லை என்பதை 14 ஆண்டுகளுக்கு பின்னர் அறிந்து அதிர்ந்து போயுள்ளார்.

டெக்சாஸை சேர்ந்தவர் ஈவ் வில்லி. இவர் தாய் மார்கோ மற்றும் தந்தைக்கு வெகுகாலமாக குழந்தை பிறக்கவில்லை.

இதையடுத்து வேறு நபரின் உயிரணுக்களை வைத்து குழந்தை பெற தம்பதி முடிவு செய்தனர்.

இதை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்கோல் என்பவரின் உயிரணுக்களை செலுத்தியதன் மூலம் மார்கோ கர்ப்பமானார். இதன் பின்னரே அவருக்கு ஈவ் வில்லி பிறந்தார்.

ஈவ் வில்லி வளர்ந்து வந்த நிலையில் 14 ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்டீவ் உயிரணுக்கள் மூலம் தான் பிறந்ததை தெரிந்து கொண்டார்.

இதையடுத்து ஸ்டீவை கண்டுபிடித்து அவரை அப்பா என அழைத்து பாசமாக பழகினார் ஈவ்.

மேலும் சுற்றுலாவுக்கு ஸ்டீவை அழைத்து சென்றதோடு அவர் தலைமையில் திருமணமும் செய்து கொண்டார்.

இந்நிலையில் தனது குடும்ப வரலாறை தெரிந்து கொள்ள ஈவ், டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியில் உறைந்தார்.

காரணம் ஸ்டீவ் அவரின் தந்தை இல்லை என்பதும், தனது தாய் மார்கோவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் தான் தனது தந்தை என்பதும் ஈவுக்கு தெரியவந்தது.

அதாவது ஸ்டீவ் உயிரணுக்களை வைத்து ஐந்து முறை மார்கோ கர்ப்பமாக முயன்றும் முடியவில்லை.

பின்னர் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவரின் உயிரணுக்கள் மார்கோவுக்கு செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஈவின் தாய் மார்கோ கருத்து கூற மறுத்துவிட்டார்.

ஈவ் கூறுகையில், அந்த மருத்துவர் ஏன் இப்படி செய்தார் என தெரியவேண்டும். எனக்கு இது வெறுப்பாக உள்ளது என மிகுந்த வேதனையுடம் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்