உலகிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் பறந்த சிறுநீரகம்! விரைவாக கிடைத்த மருத்துவ உதவி

Report Print Kabilan in அமெரிக்கா

உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகத்தை கொண்டு சென்று, நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்து சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண் ஒருவர், கடந்த 8 ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால், மேரிலாந்து மாகாணத்தில் தான் அவருக்கான சிறுநீரகம் இருந்தது தெரிய வந்தது.

அங்கிருந்து பால்டிமோருக்கு சிறுநீரகத்தை எடுத்து வருவதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து ஆளில்லா விமானம் மூலம் சிறுநீரகத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ட்ரோன் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு, அதன் மூலமாக சிறுநீரகம் வெற்றிகரமாக குறித்த பெண்ணிற்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

இந்த விடயம் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காகவே, அதிவிரைவாக நோயாளிகளிடம், உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் ட்ரோன் சேவையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்காவில் சுமார் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்துள்ளனர். எனவே இந்த ட்ரோனின் சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்