அமெரிக்க பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு..1 மாணவன் பலி 7 பேர் காயம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஒரு மாணவன் கொல்லப்பட்டுள்ளதாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொலராடோ மாநிலத்தில் உள்ள STEM பள்ளியிலே இத்துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 18 வயதுடைய மாணவன் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காயமடைந்த மாணவர்கள் ஹைலேண்ட் ரஞ்ச்சில் உள்ள நார்த்ரிட்ஜ் ரைசிங் சென்டருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு குறித்த தகவலறிந்த நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பள்ளிக்கு முன் கூடினர்.

சம்பவம் தொடர்பாக ஒரு சிறுவன் மற்றும் இளைஞரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும், சம்பவயிடத்திலிருந்து கைது துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers