நண்பர் வீட்டு கதவை திறந்தவரின் முகத்தை பதம் பார்த்த பாம்பு: ஒரு திடுக் வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் நண்பர் வீட்டுக்கு சென்ற ஒருவருக்கு வித்தியாசமான வரவேற்பு கிடைத்தது.

Oklahomaவிலுள்ள தனது நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தார் Jerel Heywood. அவர், வீட்டின் கதவைத் திறக்கவும், கதவின் அருகிலுள்ள மின்விளக்கு ஒன்றில் சுற்றியிருந்த பாம்பு ஒன்று அவர் முகத்தில் பாய்ந்து கொத்தியிருக்கிறது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் Jerel அந்த வீட்டின் கதவைத் திறக்கவும், அந்த பாம்பு திடீரென அவரது முகத்தைக் கொத்துவதைக் காணலாம்.

அலறியடித்து ஓடும் Jerelஇன் சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உதவிக்கு வருகிறார்.

அவர் தனது கையில் வைத்திருந்த சுத்தியலால் ஓங்கி ஒரே அடி அடிக்க, பாம்பு கீழே விழுகிறது.

இரண்டு அடிக்கு மேல் வாங்குவதற்கு அந்த பாம்பு உயிருடன் இல்லை. பாம்பிடம் கடிவாங்கிய Jerel, பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நல்ல வேளையாக அவரைக் கடித்த பாம்பு விஷமற்ற பாம்பு என்பதால் Jerelக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை.

காயத்திற்காக அவருக்கு ஆண்டிபயாட்டிக்குகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த பாம்பு, சில நாட்களுக்குமுன் மழை பெய்ததால், தண்ணீருக்கு தப்பி அந்த மின்விளக்கைச் சுற்றிக்கொண்டு இருந்திருக்கிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்