நண்பர்களை காப்பாற்ற தன் உயிரை கொடுத்து ஹீரோவான சிறுவன்... உருக வைக்கும் சம்பவம்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவின் கொலராடோ மாநிலப் பள்ளியில் 2 மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், 7 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் சம்பவயிடத்தலிருந்த மாணவர்கள் கூறுகையில், கொல்லப்பட்ட 18 வயதுடைய Kendrick Ray Castillo, மற்ற மாணவர்களின் உயிரை காப்பாற்ற யோசிக்காமல் துப்பாக்கிதாரியை பாய்ந்து பிடித்துக்கொண்டார்.

Kendrick Ray Castillo தாக்குதல்தாரியை தடுத்தபோது மற்ற மாணவர்கள் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துகொள்ளவும், தப்பியோடவும் அவகாசம் கிடைத்தாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரையும் பொலிசார் கைதுசெய்து, துப்பாக்கிச் சூட்டிற்கான நோக்கம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் Kendrick Ray Castillo-வுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எங்களுடைய வாழ்க்கையில் அவன் இல்லாமல் என்ன செய்யப் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை என Kendrick Ray Castillo-வின் தந்தை மனம் வருந்தியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers