வெளிநாட்டிலிருந்து காதலனை பார்க்க வந்த காதலி... அதன் பின் நடந்த விபரீத சம்பவத்தின் பின்னணி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவிலிருந்து காதலனை பார்க்க வந்த காதலி, அவரை ஆள் வைத்து கடத்தி தாக்குதலில் ஈடுபட்ட சமப்வம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ராமநாதன் தெருவைச் சேர்ந்தவர் நவீத் அகமது. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கிளம்பிய இவர் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் இருக்கும் முட்புதரில் படுகாயங்களுடன் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார்.

இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அதன் பின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின் மருத்துவமனைக்கு விரைந்து வந்த பெற்றோர் மகனின் நிலையை பார்த்து, இதற்கு காரணமான நபர் யார் என்பது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில்,

அமெரிக்காவில் வசிக்கும் மேகா என்ற பெண்ணும், நவீத் அகமதுவும் சமூகவலைத்தள பக்கம் மூலம் அறிமுகமாகி நண்பர்களாகியுள்ளனர்.

நாளைடைவில் இவர்களின் நட்பு காதலாக மாற, இருவரும் அடிக்கடி சமூகவலைத்தள பக்கத்திலே பேசி வந்துள்ளனர்.

அதன் பின் காதலனை பார்ப்பதற்காக மேக பல முறை சென்னை வந்து பல இடங்களுக்கு சுற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் திடீரென்று சண்டை ஏற்பட்டதால் பிரிவதற்கு முடிவு செய்துள்ளனர். அதன் படி மேகா கடைசியா இரண்டு பேரும் சந்தித்து பிரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

அதன் படி மேகா நேற்று முன் தினம் அமெரிக்காவிலிருந்து சென்னை வர, நவீத் அகமது- மேகா சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது ஏற்பட்ட பிரச்சனையில் கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் மேகா தலையில் தாக்கி விட்டு நவீத் அகமது தப்பி ஓடியுள்ளார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மேகா அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது நண்பர்களான சரவணன், பாஸ்கர், பாஷா ஆகியோர் உதவியை நாடியுள்ளார்.

மேகாவின் நண்பர்கள் மூவரும் திட்டமிட்டபடி பைக்கில் வந்த நவீத் அகமதுவை காரில் கடத்திப் போய் அவரை கடுமையாகத் தாக்கி விட்டு புதரில் போட்டுச் சென்றுள்ளனர்.

நவீத் அகமது போனில் யாருக்கும் தகவல் கொடுக்காமல் இருக்க அவருடைய ஐ போனையும் எடுத்துச் சென்றுள்ளனர். கடத்தலுக்கு உதவியாகவும், தாக்குதலிலும் ஈடுபட்ட மூவரில் பாஸ்கர் என்பவர் மட்டும் பொலிசாரிடம் சிக்கியுள்ளான்.

இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மேகாவிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்