இளம்பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் கிடந்த மர்ம மிருகம்: வைரலாகும் புகைப்படம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வினோத மிருகத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் கெல்லி கர்ரான். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான இடத்திற்கு காதலனுடன் சென்றுள்ளார்.

அங்கு வினோதமான ஒரு மிருகத்தின் உடல் கிடந்துள்ளது. கைகளில் பெரிய நகங்களுடனும், நீண்ட வாலும் கொண்டதாக இருந்துள்ளது.

அதனை என்னவென்று அடையாளம் காணமுடியாததால், கெல்லி கர்ரான் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த இணையதளவாசிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர் நாய் எனவும் மற்றும் சிலர் ட்ராகன் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்