9 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு உரிமையாளர்: ஒரே ஒரு பொய்யால் 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் மிக குறைந்த வயதில் 9 பில்லியன் சொத்துக்களுக்கு உரிமையாளரான பெண்மணி ஒருவர் தமது நிறுவனத்தால் 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பிறந்த 35 வயது எலிசபெத் ஹோம்ஸ் என்பவரே தமது நிறுவனத்தால் தற்போது 20 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்பார்த்துள்ளார்.

எலிசபெத் ஹோம்ஸ் தமது 9 வயதில் உலகின் அறியப்படும் செல்வந்தராக எதிர்காலத்தில் அறியப்பட வேண்டும் என தமது பாடசாலையில் சக மாணவர்களிடம் தெரிவித்தவர்.

அவரது 31-வது வயதில் 9 பில்லியன் டொலர் சொத்துக்களுக்கு அவர் உரிமையாளரானார்.

Theranos என்ற நிறுவனத்தை திறம்பட நிர்வகித்து வந்த ஹோம்ஸ், அதே நிறுவனத்தால் தற்போது சிறை தண்டனை அனுபவிக்க உள்ளார்.

இவரது நிறுவனமானது நோயாளிகளுக்கு இரத்த சோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை வழங்கி வந்துள்ளது.

இந்த நிலையில் இரத்த சோதனைக்கு என ஒரு புதிய இயந்திரம் ஒன்றை இவர் வடிமைத்தார். அதில் ஒரு துளி ரத்தம் போதும் அனைத்து வகையான சோதனைகளையும் அந்த இயந்திரமானது நொடி நேரத்தில் முடித்துவிடும்.

ஆனால் இந்த இயந்திரம் இவர்கள் விளம்பரப்படுத்தியது போன்று செயல்படவில்லை. பலரது ரத்த சோதனைகள் தவறாக கணிக்கப்பட்டது.

இதனால் இவரது நிறுவனம் மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் இழக்கத் தொடங்கினர்.

மட்டுமின்றி இவரது நிறுவன பங்குதாரர்களும் நம்பிக்கையை இழந்தனர். இதனால் கடும் இழப்பை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது Theranos நிறுவனம்.

மேலும் வாடிக்கையாளர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு ஹோம்ஸ் மற்றும் அவரது நெருங்கிய அதிகாரி Sunny Balwani ஆகியோர் மீது முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும் வழக்குப் பதியப்பட்டது.

இந்த நிலையில் 2018 செப்டம்பர் மாதம் Theranos நிறுவனம் மூடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்