கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர்... தடுமாறிய விமானி: அடுத்து நடந்த பதற வைக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
230Shares

அமெரிக்காவில் ஹெலிகொப்டர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நியூ யார்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் சிறு காயங்களுடன் 35 வயதான விமானி எரிக் மோரேல்ஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தின்போது விமானி எரிக் மோரேல்ஸ் எரிபொருள் நிரப்பும் பகுதியில் இருந்து தனியாக அருகாமையில் இருக்கும் ஹெலிகொப்டர் இறங்கும் தளத்திற்கு பறந்துள்ளார்.

ஆனால் கட்டுப்பாட்டை இழந்ததால் விமானி எரிக் மோரேல்ஸ் தடுமாறியுள்ளார். இதனையடுத்து அவசர உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் அந்த ஹெலிகொப்டர் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து நியூ யார்க்கின் ஹட்சன் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் பார்ப்பவர்களின் இதயத்தை ஒரு நொடி நிறுத்தும் வகையில் அமைந்துள்ளது.

சம்பவம் நடந்தேறும்போது கடுமையான காற்று வீசியதே ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டரானது நேரிடையாக ஆற்றில் விழுந்து விபத்து நேராமல் இருக்க, விமானி எரிக் மோரேல்ஸ், ஹட்சன் ஆற்றில் மீது ஹெலிகொப்டரை இறக்க முயன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் நிரப்பிய பின்னர், காத்திருக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துவர விமானி மோரேல்ஸ் புறப்பட்டுள்ளார்.

ஹெலிகொப்டர் இறங்கும் தளத்திற்கும் 50 அடி தொலைவில் வைத்தே ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தை முன்கூட்டியே கணித்த விமானி மோரேல்ஸ், உடனடியாக அவசர உதவி குழுவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து காலதாமதமின்றி விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டரையும் விமானியையும் மீட்க முடிந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்