பாலியல் அடிமைகளாக நடத்தப்பட்ட இளம்பெண்கள்: அம்பலமாகும் சாமியாரின் ரகசியங்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் சந்தைப்படுத்தல் தொடர்பான நிறுவனம் ஒன்றின் தலைவர் பல பெண்களை தமது பாலியல் அடிமையாக மாற்றியது தொடர்பில் பல ரகசியங்கள் அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளது Nxivm என்ற சந்தைப்படுத்தல் தொடர்பான நிறுவனம்.

இதன் நிறுவனத் தலைவர் 58 வயதான கீத் ரன்னியர். இந்த நிறுவனமானது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சி கருத்தரங்குகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் இதன் நிறுவனத் தலைவர் ரன்னியர் தொடர்பில் வெளியான தகவல்கள் அமெரிக்க மக்களை புரட்டிப்போட்டது.

இவர் தமக்கென பெண்கள் மட்டுமான குழு ஒன்றை செயல்படுத்தி வந்ததாகவும், அந்த குழுவினர் இவருடனான சந்திப்பின்போது நிர்வாணமாக இருக்க வலியுறுத்தப்பட்டதாகவும் கடந்த வெள்ளியன்று அந்த குழுவில் இருந்து வெளியேறிய பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

லாரன் சல்ஸ்மன் என்ற 42 வயது முன்னாள் உறுப்பினர் அளித்த அந்த வாக்குமூலத்தில்,

ரன்னியர் எப்போதுமே ஆடை அணிந்தபடியே கூட்டங்களில் கலந்துகொள்வார் எனவும், ஆனால் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அவரது ரகசிய பெண்கள் குழு நிர்வாணமாகவே கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியாத நாட்களில், புகைப்படம் ஒன்றை பதிவு செய்து அவருக்கு அனுப்ப வேண்டும் எனவும்,

அந்த புகைப்படமானது அவர் குறிப்பிடும் முறையில் இருக்க வேண்டும் எனவும் லாரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தனது பாலியல் அடிமைகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என அடிக்கடி கூறும் ரன்னியர், அவரது நிறுவனத்தில் கருத்தரங்குகளில் கலந்துகொள்ளவரும் இளம்பெண்கள் பலருடனும் உறவு வைத்துக் கொண்டுள்ளதாக லாரன் தெரிவித்துள்ளார்.

ரன்னியர் தற்போது தமது நிறுவனத்தை சிறார் பாலியல் ஆபாச படங்கள் தயாரிக்க பயன்படுத்தியதாகவும்,

பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறார்.

இவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சாட்சியங்களின் விசாரணை கடந்த வாரம் ப்ரூக்லினில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் துவங்கியது.

இதில் சாட்சியம் அளித்த ராலன், தமது தாயார் மூலமே அந்த நிறுவனருடன் அறிமுகமானதாக தெரிவித்துள்ளார்.

ராலனின் தாயாரும் ரன்னியரின் ரகசிய பெண்கள் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்ததாகவும்,

தமது 21 வது வயதில் அவரை சந்தித்தப்பின்னர் பல ஆண்டுகளுக்கு அவருடன் பாலியல் உறவு இருந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Nxivm நிறுவனத்தின் பல ஆசிரியர்களும், ரன்னியர் ஒரு சாமியார் எனவும், அவரால் இயற்கையை கட்டுப்படுத்த முடியும் என நம்பி வருவதாகவும் லாரன் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்