பசிக்கு சாப்பிட பசை திருடிய அமெரிக்கர்... திருடனை பிடித்து உணவு கொடுத்து நெகிழ வைத்த இந்தியர்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் கடை நடத்தி வரும் இந்தியர் ஒருவர் தனது கடையில் பசிக்கு திருடிய திருடனை கையும் களவுமாக பிடித்து, சாப்பிட உணவுக்கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் புகைப்படத்துடன் இக்கதையை சமூக வலைதளத்தில் வெளியிட்டதின் மூலம் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அமெரிக்காவின் ஓஹியோ நகரில் ஜெய் சிங் என்ற இந்தியர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், பொருட்களை பாக்கெட்டுகளில் எடுத்து மறைத்து வைத்துள்ளார். இதை, சிசிடிவியில் ஜெய் சிங் பார்த்துள்ளார்.

குறித்த இளைஞன் சில பொருட்களுக்கு மட்டுமே பில் போட்டுள்ளார். உடனே சுதாரித்த ஜெய் சிங், பாக்கெட்டிலிருக்கும் பொருட்களை எடுக்கமாறு இளைஞரிடம் கூறியுள்ளார். உடனே அங்கிருந்த ஊழியரிடன் பொலிசாருக்கு போன் செய்யும் படி கூறியுள்ளார்.

திருடியதற்கான காரணத்தை ஜெய் சிங் கேட்க்க. பசிக்காக தான் திருடியதாக இளைஞன் கூறியுள்ளான்.இதனையடுத்து, பொலிசாருக்கு போன் செய்ய வேண்டாம் எனக்கூறிய சிங், இளைஞரின் நிலையை உணர்ந்து, நீங்கள் திருடியுள்ளது உணவு அல்ல. அது வேறு. பேப்பர் ஒட்டும் பசையும் நொறுக்கு தீனிகளும்தான்.

உங்களுக்குப் பசி என்றால் என்னிடம் சொல்லுங்கள். நான் உணவு தருகிறேன்" எனக் கூறியதுடன் இளைஞருக்குத் தரமான உணவுப் பொருள்களைக் கொடுத்து நெகிழ வைத்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers