12 வயதில் முதல் கொலை... டாட்டூ கலைஞரின் பதற வைக்கும் ஒப்புதல் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் தம்முடன் ஒரே அறையில் வசித்து வந்த நபரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட டாட்டூ கலைஞரின் ஒப்புதல் வாக்குமூலம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் தென்கிழக்கு புளோரிடாவில் அமைந்துள்ள மியாமி கடற்கரை பகுதியில் குடியிருந்து வருபவர் டாட்டூ கலைஞரான நிக்கோலஸ் ப்ரெண்ட் கிப்சன்.

இவரையே தமது அறைத் தோழனை கொலை செய்த வழக்கில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சாமுராய் வாளை பயன்படுத்தி அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ள கிப்சன்,

ஊடகவியலாளர்கள் முன்னிலையில் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், ஆதரவற்ற ஒரு நபரை தமது கைகளாலையே அடித்துக் கொன்றதாக தெரிவித்துள்ள கிப்சன்,

தமது 12-வது வயதில் முதல் கொலையை செய்ததாக கூறும் கிப்சன், அதன் பின்னர் 32 பேரை கொலை செய்துள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால் கிப்சனின் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை விசாரணைக்கு பின்னரே உறுதி செய்ய முடியும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

தமது 13-வது வயதில் ஊனமுற்ற சிறுவனை ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக கூறும் கிப்சன்,

கடந்த 2000 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிக்கி 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.

சிறையில் இருந்து விடுதலையான பின்னர் ரஷ்ய நாட்டவர் ஒருவரை கொலை செய்ததாக கூறும் கிப்சன், அதே ஆண்டு போதை மருந்து புகைத்துக் கொண்டே ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை மன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்