கண்முன்னே கடத்தப்பட்ட மகள்... உதவி கேட்டு கதறிய தாய்: சினிமாவை மிஞ்சும் சம்பவம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் தாயின் கண்முன்னே கடத்தபட்ட 8 வயது சிறுமி ஏழு மணிநேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் ஒரு ஹோட்டல் அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த சலீம் சபாட்கா என்கிற 8 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது காரில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த சிறுமியை தன்னுடைய காரில் இழுத்துப்போட்டு நகர்த்த முற்பட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய், தன்னுடைய மகளை காப்பாற்றுவதற்காக வேகமாக காருக்குள் ஏற முயன்றுள்ளார்.

ஆனால் அந்த மர்ம நபர் அவரை கீழே தள்ளிவிட்டு சிறுமியை கடத்தி சென்றுள்ளார். உடனே அந்த தாய் "எனக்கு யாராவது உதவுங்கள் என்னுடைய மகளை கடத்தி செல்கிறான்" என கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.

சத்தம் கேட்டு ஓடிவந்த பக்கத்து வீட்டு நபர்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கடத்தப்பட்ட இடத்திலிருந்து 8 மைல்கள் தூரத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறையிலிருந்து சிறுமியை மீட்டனர்.

அதே அறையில் இருந்த 51 வயதான மைக்கேல் வெப் என்பவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளியின் அடையாளங்கள் மற்றும் கார் எண் உள்ளிட்டவைகளை வெளியிட்டுள்ள பொலிஸார், சிறுமியை காப்பாற்ற உதவிய பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers