எங்களுடன் போர் புரிய விரும்பினால்.. ஈரான் அதோடு அழிந்துவிடும்! டிரம்ப் எச்சரிக்கை

Report Print Kabilan in அமெரிக்கா

ஈரான் போர் தங்களோடு புரிய விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை விமர்சித்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்ததுடன், ஈரானிடம் இருந்து உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என்றும் தெரிவித்தார்.

இதனால் இருநாடுகளிடையே மோதல் வலுத்ததைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெயை அனுப்பும் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடப்போவதாக ஈரான் அறிவித்தது.

அதன் பின்னர் அவ்வழியாக சென்ற சவுதி உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் தாக்கப்பட்டன.

அதனைத் தொடந்து, போர்க்கப்பலை ஈரானுக்கு எதிராக பெர்ஷியன் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பியதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,

‘ஈரான் எங்களுடன் போர்புரிய விரும்பினால், ஈரான் அதோடு முடிந்துவிடும். அமெரிக்காவை மீண்டும் அச்சுறுத்த முடியாது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்