பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்!

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் மோர்ஹவுஸ் கல்லூரியில் பட்டம் பெற்ற 400 மாணவர்களின் கல்வி கடன்கள் அனைத்தும் தொழிலதிபர் ஒருவர் செலுத்துவதாக அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் புகழ்ப்பெற்ற மோர்ஹவுஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் கல்வியாளர்கள், மூத்த பேராசியர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் என்பவரும் கலந்துக் கொண்டார்.

அதுவரையில் அங்கு பட்டம் பெற வந்த 400 மாணவர்கள், தங்களுக்காக ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என அறிந்திருக்க மாட்டார்கள்.

மேடையில் உரையாற்றிய ஸ்மித் கூறுகையில், இங்கு இருக்கும் 400 பட்டம் பெற்ற மாணவர்களின் கல்வி கடன்களில் மொத்த தொகையை நான் செலுத்துகிறேன் என கூறினார்.

இதனை அறிவித்த அடுத்த நொடி அரங்கமே அதிர பெற்றோரும், மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

கல்வி கடனின் மொத்த மதிப்பு 40 மில்லியன் டொலர் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஸ்மித், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கருப்பின மாணவர்கள் பயிலும் இந்த கல்லூரிக்கு 1.5 மில்லியன் டொலர் உதவித்தொகையாக அறிவித்தார்.

ஆனால், நேற்று ஸ்மித் வெளியிட்ட இந்த அறிவிப்பு, 400 மாணவர்களுக்கும் சிறந்த யோகம் என்றே கூறப்படுகிறது.

இது குறித்து கல்லூரியின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், இந்த பரிசு கல்லூரி வரலாற்றிலேயே ஒரு மிகச் சிறந்த நிகழ்வாகும்.

இதற்காக தொழிலதிபர் ராபர்ட் ஸ்மித் அவர்களுக்கு எங்கள் கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்