உயிரிழந்த மகனின் உயிரணுக்களை வைத்து அவர் குழந்தையை உருவாக்க கோரிய பெற்றோர்... நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் உயிரிழந்த ராணுவத்தில் பணிபுரிந்த இளைஞரின் உயிரணுக்களை வைத்து அவரின் வாரிசை உருவாக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராணுவத்தில் பண்புரிந்து வந்த பீட்டர் ஜூ (21) என்ற இளைஞர் கடந்த பிப்ரவரியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில் தங்கள் குடும்பத்தின் மரபுரிமை தொடர பீட்டரின் பெற்றோரான யோங்மின் மற்றும் மோனிகா ஆகியோர் ஒரு அதிரடி முடிவை எடுத்தனர்.

அதன்படி பீட்டரின் ஒப்புதலோடு அவரின் உயிரணுக்களை அவர்கள் அதற்கான வங்கியில் பாதுகாப்பாக சேமித்து வைத்திருந்த நிலையில் அதை வைத்து பீட்டரின் வாரிசை உருவாக்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரினார்கள்.

மேலும், பீட்டருக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தைகள் பெற்று கொள்ள வேண்டும் என ஆர்வம் இருந்ததாகவும் அதை நிறைவேற்ற இதற்கு அனுமதிக்க கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்கள்.

இந்நிலையில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பீட்டரின் பெற்றோர் வைத்த கோரிக்கையை ஏற்று, அவர்கள் பீட்டரின் உயிரணுக்களை அவரின் வாரிசை உருவாக்க மருத்துவ ரீதியாக பயன்படுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்