நீங்கள் இறந்தபின் என்னவாக விரும்புகிறீர்கள்? :உரமாக விரும்பும் அமெரிக்கர்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

மனிதர்கள் இறந்தால் புதைப்பதற்கும் எரிப்பதற்கும் பதிலாக அவர்களை உரமாக்கும் நடைமுறைக்கு அமெரிக்காவிலேயே முதல் முறையாக வாஷிங்டன் மாகாணம் அனுமதியளித்துள்ளது.

கவர்னர் Jay Inslee, இந்த நடைமுறையை சட்டமாக்கும் மசோதாவில் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.

உரிமம் பெற்ற அமைப்புகளுக்கு மனித உடலை இயற்கை உரமாக்கும் நடைமுறையை செயல்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறையில் இறந்த மனித உடல், மரத்துகள் மற்றும் வைக்கோல் போன்றவற்றுடன் கலந்து சில வாரங்களுக்கு மக்கச் செய்யப்படும்.

இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள், உடலை எரிப்பதற்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு திட்டம் இது என்கிறார்கள்.

உடலை எரிப்பதால் கார்பன்டையாக்சைடும் சாம்பலும் காற்றில் பரவும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனவே இனி மக்கள் தங்களுக்கு பிரியமானவர்கள் இறந்துபோனால், அவர்களை மக்கச் செய்து உரமாக்கி தங்கள் வீட்டுத் தோட்டத்தில் தூவலாம், அல்லது பத்திரமாக அவர்கள் நினைவாக வைத்துக் கொள்ளலாம். இதனால் பெருமளவில் இடமும் மிச்சமாகும்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்