இந்திய மக்களை இதற்காக நாங்கள் பாராட்டுகிறோம்! அமெரிக்கா

Report Print Kabilan in அமெரிக்கா

இந்திய தேர்தல்களின் நியாத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், யார் வெற்றி பெற்றாலும் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்றும் அமெரிக்க அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இன்று இந்தியாவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய தேர்தல்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாக அமெரிக்க அரசு செய்தித்தொடர்பாளர் மோர்கன் ஆர்டேகஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘மற்ற நாடுகளுக்கு அனுப்புவது போல் இந்தியாவுக்கு அமெரிக்கா தேர்தல் பார்வையாளர்களை அனுப்புவதில்லை. காரணம் இந்தியத் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படுகிறது.

Bryan Bedder/Reuters

நாங்கள் இந்திய அரசுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறோம், அனைத்து விவகாரங்களிலும் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி வருகிறோம். மைக் பாம்பியோ, இந்தியா மூலம் நமக்கு ஒரு நல்ல ராஜீயக் கூட்டாளி கிடைத்துள்ளது என்று அடிக்கடி கூறியுள்ளார்.

மனித வரலாற்றிலேயே இந்தியத் தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய ஒரு விழா என்று சிலர் என்னிடம் கூறினர். இவ்வளவு பெரிய திருவிழாவை மக்கள் அமைதியுடன் நடத்திக் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய மக்களை இதற்காக நாங்கள் பாராட்டுகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்