ஏவுகணை பரிசோதனை நடத்தும் வடகொரியா.. எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை: டிரம்பின் ட்வீட்

Report Print Kabilan in அமெரிக்கா

வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் தனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஜப்பானுக்கு சென்றுள்ளார். 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் வடகொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில், வடகொரியா ஏவுகணை பரிசோதனை நடத்துவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘சிறிய ரக ஆயுதங்களை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது.

இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. ஆனால், எனக்கு எந்த இடையூறு ஏற்படவில்லை. கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...