1000 மாணவர்களுக்கு கைகுலுக்கி பட்டமளித்த டிரம்ப்!

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழாவில், சுமார் 1,000 பேரிடம் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைகுலுக்கினார்.

கொலராடோ மாநிலத்தில் உள்ள அமெரிக்க விமானப்படை பயிற்சி மையத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில், 989 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பாக சுமார் 1,000 பேருக்கு ஜனாதிபதி டிரம்ப் கைகுலுக்கியது, மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஒவ்வொருவரிடமும் டிரம்ப் கைகளை குலுக்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அங்கிருந்த அதிகாரிகளுடனும் கைகுலுக்கி வாழ்த்துக்களை பரிமாறினார்.

பட்டங்களை பெற்ற மாணவர்கள் உற்சாகத்துடன் துள்ளிக் குதித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த விழாவுக்காக டிரம்ப் பல மணிநேரம் செலவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்