அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கிசூடு: 12 பேர் பலி... 6 பேர் படுகாயம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் வர்ஜீனியா கடற்கரை பகுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 12 பேர் பலியாகியிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வர்ஜீனியா கடற்கரை பகுதியில் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் 12 பேர் பலியானதோடு, 6 பேர் படுகாயமடைந்திருப்பதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், தாக்குதல் நடத்திய நபர் நீண்ட நாட்களாக கடற்கரை பொது பயன்பட்டு ஊழியராக பணிபுரிந்து வந்தவர்.

அதிருப்தியின் காரணமாகவே இந்த தாக்குதல் நடத்தியுள்ளார். இதை ஒரு பொலிஸார் இதில் பொலிஸார் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளார். பொலிஸார் திருப்பி சுட்டதில், தாக்குதல் நடத்திய நபரும் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வர்ஜீனியா நகர மேயர் Dyer, வர்ஜீனியா கடற்கரை வரலாற்றில் இது மிகப்பெரிய பேரழிவு நாள் என கூறியுள்ளார்.

அப்பகுதியில் தற்போது ஏரளாமான பொலிஸார் குவிக்கப்பட்டு, பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்