கடுமையாக விமர்சித்த இளவரசி மேகனுக்கு அதிபர் ட்ரம்ப் கொடுத்த பதில்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

பிரித்தானிய இளவரசி மேகன் மோசமானவர் என்று எனக்குத் தெரியவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தன்னுடைய மனைவியுடன் மூன்று நாள் பயணமாக பிரித்தானியாவிற்கு வருகை தர உள்ளார்.

புதிதாக பிறந்த ஆர்ச்சியை கவனித்துக்கொள்ள வேண்டியிருப்பதால், அன்று நடக்கவிருக்கும் மதிய விருந்தில் இளவரசி மேகன் மட்டும், கலந்துகொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.

2016 ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலின் போது பேசிய மேகன், ட்ரம்ப் ஒரு பிரிவினைவாதி, தவறான எண்ணம் கொண்டவர் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும், நான் ஹிலாரி கிளின்டனுக்கு தான் வாக்களிக்க போகிறேன் என வெளிப்படையாக பேசியிருந்தார். ட்ரம்பை புறக்கணிபப்தற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்பிடம் மேகன் வைத்திருந்த விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், 'எனக்கு அது தெரியாது. நான் என்ன சொல்ல முடியும்? அவர் மோசமானவர் என்று எனக்குத் தெரியவில்லை என கூறினர்.

மேலும் பேசுகையில், மேகன் அரச குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கூறினார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers