அமெரிக்காவில் ஆபாச பட நடிகையாக இருந்த ஒரு பெண், நாட்டுக்கு சேவை செய்ய முன் வந்துள்ளார்.
Eva Angelina என்ற பெயரில் நடித்து வந்த Nicole Tyler (34) தனது 18 வயது முதலே வெற்றிகரமான ஆபாச பட நடிகையாக இருந்தவர்.
தற்போது ப்ளோரிடாவில் தீயணைப்புத்துறையில் அவர் தனது பயிற்சியை முடித்து சான்றிதழும் பெற்றுள்ளார்.
அமெரிக்காவைப் பொருத்தவரையில் தீயணைப்புத்துறையில் சேருபவர்கள், முன்பு நிர்வாண புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தாலும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
தீயணைப்புத்துறையில் பயிற்சி முடித்திருந்தாலும், Nicole சுமார் ஓராண்டு வரை பணியில் அமர்த்தப்படுவதற்கு காத்திருக்க வேண்டும்.
ஒரு காலகட்டத்திற்கு மேல், ஆபாச பட உலகை விட்டு வெளியேற வேண்டும் என்று முடிவு செய்த Nicole, முடி வெட்டுவது முதல் பல வேலைகளை முயற்சி செய்திருக்கிறார்.
சிறு வயதில் கடற்படையில் சேர வேண்டும் என ஆசை வைத்திருந்த Nicole, ஏதாவது ஒரு வகையில் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என முடிவெடுத்து தீயணைப்புத்துறையை தேர்ந்தெடுத்துள்ளார்.
தனியாக வாழும் Nicole, ஒரு குழந்தைக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.