ஒரே நாளில் தலை முடி நரைத்து பாட்டி போல் மாறிய பெண்: என்ன சொல்கிறார் தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ஒரே நாளில் பாட்டி போல முடியெல்லாம் நரைத்துப் போன ஒரு பெண், தனது நரைமுடியைக் குறித்து முதலில் வெட்கப்பட்டாலும், இப்போது தான் முன்னை விட கவர்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

அரிசோனாவைச் சேர்ந்த Sara Eisenman, 21 வயது ஆகும்போதே முடி நரைக்க ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்.

ஒரே நாளில் நரைத்து விட்டது போல் இருந்தது என்று கூறும் Sara, உடனடியாக அதை மறைக்க, தலைக்கு சாயம் பூசத் தொடங்கியதாக தெரிவிக்கிறார்.

தனது மகனை பிரசவிப்பதற்காக மருத்துவமனைக்கு செல்லும் முன் கூட, மக்கள் தன்னை பார்க்க வருவார்களே, தனது தலை முடியைக் குறித்து என்ன சொல்வார்கள் என அஞ்சி தலை முடிக்கு சாயம் பூசியதாக தெரிவிக்கிறார் Sara.

தனது இரண்டாவது மகள் பிறந்தபோது, அவரது மன நிலைமை சற்று மாறியிருக்கிறது. தான் தனது தலை முடிக்கு சாயம் பூசியிருக்கிறேனா இல்லையா என்பதை விட வாழ்க்கையில் முக்கியமான விடயங்கள் உள்ளன என்பதை உணர்ந்ததாக தெரிவிக்கிறார் Sara.

15 ஆண்டுகளாக முடியின் நிறத்தை மறைத்து வாழ்ந்த Sara, 37 வயதானபோது சாயத்தை தூக்கி வீடி விட்டு, தனது வெள்ளி நிற தலைமுடி தனக்கு கிரீடம் போல இருப்பதாக உணர்ந்ததோடு, சாயத்திடம் இருந்து விடுதலை பெற்றது போன்ற உணர்வையும் பெற்றிருக்கிறார்.

Saraவின் கணவர், மனைவியின் முடிவுக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவிக்க, இதைக் குறித்து தோழிகளிடம் கேட்டபோது, வயதான சூனியக்காரியைப் போல் தோற்றமளிப்பாய் என்று கூறியிருக்கிறார்கள் சிலர்.

என்றாலும் மனம் சோர்ந்து போகாமல், தனது வெள்ளி நிற முடியுடன் Sara வெளியே செல்ல பார்த்த பலரும் அவரை ஆச்சரியத்துடன் பாராட்டியிருக்கிறார்கள்.

இப்போது நான் முன்னிருந்ததைவிட கவர்ச்சியாக உணர்கிறேன் என்று கூறும் Sara, ஒரு நரம்பியல் அறிவியலாளர் மட்டுமின்றி ஒரு எழுத்தாளரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்