இறந்த எஜமானருக்காக படுக்கை அருகே காத்திருக்கும் நாய்: உருகவைக்கும் புகைப்படம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் இறந்த தன்னுடைய எஜமானரின் வருகைக்காக, நாய் ஒன்று பல நாட்களாக படுக்கை அருகே காத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நியூஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்த மூன்று வயதான மூஸ் என்கிற வளர்ப்பு நாய், தனது உரிமையாளரின் மருத்துவமனை படுக்கையின் பக்கத்திலேயே பொறுமையாக காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் பாவம் இறந்த அதன் உரிமையாளர் திரும்ப வரமாட்டார் என்பது அதற்கு தெரியவில்லை என, தற்போது அதனை தற்காலிகமாக கவனித்து வரும் 'Eleventh Hour Rescue' என்கிற அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நார்த்ஸ்டார் செல்லப்பிராணி மீட்பு என்கிற பேஸ்புக் பக்கத்தில், "தயவுசெய்து மூஸுக்கு ஒரு புதிய வீடு மற்றும் குடும்பத்தைக் கண்டுபிடிக்க உதவுங்கள். அவன் இயற்கையிலேயே இனிமையான, மகிழ்ச்சியான ஒரு சிறுவன். காயமடைந்த அவனுடைய இதயத்தை குணப்படுத்துவதற்கு உறவுகள் தேவை" என பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்