ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம்... கொந்தளித்தார் டிரம்ப்

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்கா கண்காணிப்பு விமானம் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈரான் வான்வெளியில் ஊடுருவிய அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால், ஈரானின் கூற்றுகளை மறுத்த அமெரிக்கா, சர்வதேச வான்வெளியல் பறந்துக்கொண்டிருந்த அமெரிக்கா கண்காணிப்பு விமானத்தை ஈரான் தாக்கியதாக தெரிவித்தது.

பொருளாதார தடை, எண்ணெய் கப்பல்கள் தாக்குதல், தற்போது உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் மோதல்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரான் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டது என கொந்தளித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்