திருணம் முடிந்த 30 வினாடிகளில் குழந்தை பெற்றெடுத்த மணப்பெண்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் நியூஜெர்ஸியை மாகாணத்தை சேர்ந்த தம்பதிக்கு திருமணம் முடிந்த 30 வினாடிகளிலேயே குழந்தை பிறந்துள்ளது.

அமெரிக்காவில் "இது எங்கள் கதை என்று எங்களால் நம்ப முடியவில்லை" என்னும் தலைப்பின் கீழ் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் கதைகளில், இந்த வாரம், மைக்கேல் கல்லார்டோ மற்றும் மேரி மார்கரிடோண்டோ தம்பதியினர் தங்களுடைய வாழ்வில் நடந்த நிகழ்வினை பகிர்ந்துள்ளனர்.

நியூஜெர்ஸியை மாகாணத்தை சேர்ந்த மைக்கேல் கல்லார்டோ மற்றும் மேரி மார்கரிடோண்டோ என்கிற தம்பதியினர் தங்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.

ஆனால் மூன்று வாரத்திற்கும் முன்னதாகவே திடீரென மேரிக்கு நீர்க்குடம் உடைந்தது. உடனடியாக மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என தம்பதியினர் விரும்பியுள்ளனர். இதனை கேட்ட செவிலியர்கள் வேகமாக ஆளுக்கொரு திசையில் ஓடி, திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தனர்.

பின்னர் திருமணம் முடிந்த உடனே மேரி அறுவை சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டார். அடுத்த 30 வினாடிகளில் அவருக்கு மைக்கேல் என்கிற அழகிய குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்