இளைஞரின் விபரீத ஆசைக்கு பலியான சீனப்பெண்: பெற்றோர் கதறியழும் வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

பெற்றோரை நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்ற ஆசையுடன் அமெரிக்காவுக்கு கல்வி கற்க வந்த இளம்பெண்ணை அமெரிக்க இளைஞர் ஒருவர் கொலை செய்த வழக்கில், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைக் கேட்டு அந்த பெண்ணின் பெற்றோர் கதறியழுதனர்.

சீரியல் கில்லராவது எப்படி, மோசமான செயல்கள் செய்வதன் மூலம் புகழ் பெறுவது எப்படி என்ற ஆசைகள் கொண்ட இரண்டாவது முகம் கொண்ட மாணவரான Brendt Christensen (29), YingYing Zhang (26) என்னும் சீன மாணவியை வன்புணர்ந்து கொலை செய்தார்.

பொலிஸ் வேடமிட்டு Zhangஐ காரில் கடத்திய Brendt, அவரை பேஸ்பால் மட்டையால் அடித்து, கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, அவரது தலையை வெட்டியுள்ளார்.

ஆனால் Brendt-தான் Zhangஐ கொலை செய்தார் என்பதற்கு வலுவான ஆதாரம் எதுவும் இல்லை. Brendtஇன் காதலியை வைத்து அவரை சிக்க வைக்க முடிவு செய்த பொலிசார், அந்த பெண்ணின் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக் மூலம், அவர்கள் பேசுவதை பதிவு செய்தனர்.

Brendt பேசப்பேச, சமுதாயத்தில் முனைவர் பட்டம் பெற படிக்கும் ஒரு மாணவனாக உலா வந்த அவரது இன்னொரு இருண்ட பக்கம் வெளிவரத்தொடங்கியது.

Brendtக்கு யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்று ஆசை.

வித்தியாசமான பாலுறவு, கடத்தல், வன்புணர்வு என அத்தனை குற்றங்களையும் செய்து பார்க்க அவருக்கு அலாதி ஆசை.

அப்படிப்பட்ட ஆசையில் சிக்கியவர்களில் ஒருவர்தான் Zhang. Brendt தனது காதலியுடன் பேசும்போது, Zhang தவிர, வேறு 12 பெண்களையும் கொலை செய்திருப்பதாக தெரிவித்தார்

ஆனால் அந்த உடல்கள் எங்குள்ளன என்பது குறித்து தனது காதலி உட்பட யாரிடமும் கூறமாட்டேன் என்று அவர் கூறியதையடுத்து Zhangஇன் உடல் எங்கிருக்கிறது என்ன ஆனது என்பது இதுவரை தெரிய வரவில்லை.

ரகசியமாக பதிவு செய்யப்பட்ட இந்த உரையாடல்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன் போட்டு காட்டப்பட்ட நிலையில், நேற்று Brendt குற்றவாளி என்பதை நீதிமன்றம் உறுதி செய்தது.

Zhangஇன் பெற்றோர், நீதிமன்றம் Brendt குற்றவாளி என்பதை உறுதி செய்ததையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது Zhangஇன் தந்தை, நீதிபதிகள் முதல் வழக்கில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்போது, Zhangஇன் தாயார் கதறியழுத காட்சி கல்மனதையும் கரையச் செய்யக்கூடியதாக இருந்தது.

இது தீர்ப்பில் ஒரு நல்ல முன்னேற்றம், முதல் படி என்று கூறியுள்ள அவர்கள், Brendtக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். நீதிபதிகள் குழு ஒன்று, Brendtக்கு மரண தண்டனை விதிப்பதா இல்லையா என தீர்மானிக்க உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்