சென்னையை பூர்வீகமாக கொண்டு வெளிநாட்டில் சாதிக்கும் பெண் மீது மோசமான விமர்சனம்.. யார் அவர்?

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்க நாடாளுமன்ற செனட் அவை எம்.பி.யாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், இணையதளத்தில் இனரீதியிலான விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

கமலா ஹாரிஸின் தாய் ஷாயமளா சென்னையை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். இவர் கடந்த 1960ல் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார்.

கமலாவின் தந்தை, ஜமைக்கா நாட்டவர். 54 வயது கமலா ஹாரிஸ் தற்போது ஜனநாயகக் கட்சி சார்பில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் இணையதளத்தில் இனரீதியிலான விமர்சனத்தை கமலா தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறார்.

அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட நபர் எழுதியுள்ள கட்டுரையில், கமலா உண்மையான அமெரிக்க கறுப்பினத்தவர் கிடையாது, அவர் பாதி இந்தியர், பாதி ஜமைக்கா நாட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மகனான ஜூனியர் டிரம்ப், மறுபதிவு செய்துள்ளார். அதில், மேற்கண்ட பதிவு உண்மையா என சமூகவலைதளத்தில் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த கமலாவின் பிரசாரத் தொடர்பு இயக்குநர் லில்லி ஆடம்ஸ், ஒபாமாவுக்கு எதிராக முன்பு டிரம்ப் தெரிவித்தது போன்ற இன ரீதியிலான விமர்சனத்தை இப்போது அவரது மகனும் முன்வைத்துள்ளார்.

இத்தகைய விமர்சனம் கடந்த காலத்தில் எடுபடாது போல இனியும் பயன் தராது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் இந்த விவகாரத்தில் கமலாவுக்கு ஆதரவாக பேசியுள்ள நிலையில் அமெரிக்காவில் இனவெறிக்கு இடமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்