79 வயது தாத்தாவை திருமணம் செய்து கொண்ட அழகி! வாழ்வில் இப்படியொரு சோகமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

தாத்தா வயது நபர் ஒருவரை மணந்துள்ள அமெரிக்கப் பெண் ஒருவர் வாரிசுக்காக ஏங்கும் நிலையில், குழந்தை பெற்றுக்கொள்வதில் சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அர்க்கன்சாசைச் சேர்ந்த Alexis Tadlock (24), 2017ஆம் ஆண்டு மனைவியை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த Charlesஐ சந்தித்தார்.

அவரது குடும்பத்துடன் ஏற்கனவே அறிமுகம் ஆனதால், ஆறுதல் நட்பாகி, நட்பு காதலாகியிருக்கிறது.

ஆனால் இந்த காதலை பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர், காரணம் 48 மற்றும் 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான Charlesஇன் வயது 79!

தனிமையில் சோகமாக இருந்த Charlesக்கு இன்னொரு வயதான பெண்ணை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் Alexis.

ஆனால் அந்த பெண்ணை Charles சந்திக்கச் செல்லக்கூட இல்லை. ஒரு நாள் Charlesம், Alexisஇடம், ஒரு இளைஞரை சென்று சந்தித்து பழக விருப்பமா என்று கேட்டிருக்கிறார்.

Alexisக்கு Charlesஐ விட்டு விட்டு இன்னொருவரை மணக்க ஆசையில்லை. எனவே, இருவரின் மனங்களும் ஒத்துப்போனதால், முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

தனக்கு ஒரே ஒரு கவலைதான் என்று கூறும் Alexis, சார்லஸ் தனக்கு முன் இறந்துவிடுவார் என்பதால், அவருடன் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்.

அவர் இறந்துவிட்டாலும் அவர் நினைவாக, அவரது ஒரு பாகம் என்னுடனேயே இருக்கும் என்கிறார் அவர்.

ஆனால் மற்றவர்கள் Alexisஐ சுயநலம் பிடித்தவர் என்கிறார்கள், அப்பா இல்லாத ஒரு நிலைமையை குழந்தைக்கு ஏற்படுத்தப்போவதாக அவர்கள் கூறுகிறார்கள் என்கிறார் அவர். Charlesக்கு ஆகஸ்டு மாதம் வந்தால் 80 வயது ஆகிறது.

எனவே அவரால் தனக்கு குழந்தை கொடுக்க முடியாது என்று மக்கள் கருதுவதாக தெரிவிக்கும் Alexis, ஒரு உண்மையை சொல்கிறார்.

தாங்கள் குழந்தைக்காக முயற்சி செய்வதாகவும், அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், உண்மையில் சார்லஸ் ஆரோக்கியமாக இருப்பதாகவும், தனக்குதான் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிறிது பிரச்சினை என்றும் கூறியுள்ளார் Alexis.

எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும், அவர் இறந்தாலும், வாழ்நாள் முழுவதும் அவரது ஒரு பாகம் என்னுடன் இருக்கவேண்டும் என்று கூறும் Alexis, அதற்காக, தான் சிகிச்சை பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...