வெளிநாட்டில் 4 இந்தியர்கள் செய்த மோசடி செயல்.. அடுத்தடுத்து வெளியான தகவல்

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் ஹெச்1பி விசா மோசடியில் ஈடுபட்டதாகக் 2 மென் பொறியாளர்கள் உள்பட 4 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நால்வரும் ஹெச்1பி விசா திட்டத்தை தவறான நோக்கத்துக்காகப் பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட 4 இந்தியர்களில் விஜய் மனோ(39), வெங்கட்ரமணா மனனம் (47), பெர்னான்டோ சில்வா (53) 3 பேரும் நியூ ஜெர்சியை சேர்ந்தவர்கள். சதீஸ் வெமுரி (52) என்பவர் கலிபோர்னியாவை சேர்ந்தவர்

இவர்கள் 4 பேரையும் 2.50 லட்சம் டொலர்கள் மதிப்புள்ள அமெரிக்க பிணையப் பத்திரம் மூலம் ஜாமீனில் நீதிமன்றம் விடுவித்தது.

இவர்கள் 4 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இதில் மனோ மற்றும் வெமுரி ஆகிய 3 பேரும் 2 ஐடி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

தங்களின் நிறுவனத்துக்கு ஆட்களை வேலைக்கு எடுத்து அமர்த்திக் கொண்டு, சிறிது நாட்களில் வேறு நிறுவனத்துக்கு மாற்றிவிடுவார்கள்.

இதில் சில்வா மற்றும் மனனம் ஆகியோர் நியூஜெர்சியில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...