250 தமிழ் ஆளுமைகள் பங்கேற்கும் உலகத் தமிழ் மாநாடு! சிகாகோவில் இன்று தொடக்கம்

Report Print Kabilan in அமெரிக்கா

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்குகிறது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 2015ஆம் ஆண்டு ‘உலகத் தமிழ் மாநாடு’ நடைபெற்றது. அதன் பின்னர், தற்போது அமெரிக்காவில் 10வது உலகத் தமிழ் மாநாடு இன்று தொடங்குகிறது.

சிகாகோவில் நடைபெறும் இம்மாநாட்டினை உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், வட அமெரிக்கத் தமிழ் சங்க பேரவை மற்றும் சிகாகோ தமிழ் சங்கம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியரஜன், தமிழக அரசு சார்பில் 20 தமிழறிஞர்கள், சு.வெங்கடேசன் உள்பட சுமார் 250 தமிழ் ஆளுமைகள், 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆய்வாளர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள் என சுமார் 6 ஆயிரம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இதில் 32க்கும் மேற்பட்ட இணைய அமர்வுகள், கீழடி ஆய்வு பற்றி சிறப்பு விவாதம், குறள் தேனீ, தமிழ் தேனீ, சங்கங்களின் சங்கமம், குறும்பட போட்டி, கவியரங்கம், யுவன் சங்கர் ராஜா கச்சேரி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இதற்கிடையில், சிகாகோ நகரில் திருவள்ளுவரின் சிலை நிறுவப்பட உள்ளது. இதற்கான முழுசெலவையும் வி.ஜி.சந்தோஷம் என்ற தொழிலதிபர் ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு வருகிற 7ஆம் திகதி வரை அங்கு நடைபெற உள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்