கவனமாக இருங்கள்.. அவை உங்களை தாக்கலாம்! மீண்டும் ஈரானை எச்சரித்த டிரம்ப்

Report Print Kabilan in அமெரிக்கா
147Shares

ஈரான் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் வைத்துள்ள யுரேனியம் அவர்களையே தாக்கலாம் என்றும் ஈரானுக்கு டிரம்ப எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்று கடுமையாக விமர்சித்தார். அத்துடன் அந்நாட்டுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் தான் பதவியேற்ற பிறகு தெரிவித்தார்.

அதன் பின்னர், ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது.

டிரம்ப் பலமுறை ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் அதிகரித்த நிலையில் மீண்டும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘அணு ஆயுத ஒப்பந்தம் இல்லை என்றால் நாங்கள் எவ்வளவு யுரேனியத்தை வேண்டுமானாலும் வைத்திருப்போம் என்று ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்திருக்கிறார்.

இதனால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து ஈரான் கவனமாக இருக்க வேண்டும். அவை மீண்டும் உங்களை தாக்கலாம். முன்பை விட அதிகமாக தாக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்