நிலநடுக்கத்தின் போது நேரலையில் செய்தி வாசிப்பாளர்கள் செய்த செயல்: வைரல் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது, டி.வி நேரலையில் செய்தி வாசிப்பாளர் செய்த செயல் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ரிக்டர் அளவில் 6.9 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சான் டியாகோ வரை நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் மாகாணத்தில் கட்டிடங்கள் உட்பட பல சேதமடைந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் முதற்கட்ட தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் நிலநடுக்கத்தின் போது சிபிஎஸ் செய்தி தொகுப்பாளர் சாரா டான்சே, நாங்கள் மிகவும் வலுவான நடுக்கத்தை உணருகிறோம்.நாங்கள் மேசைக்கு அடியில் செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன் எனக் கூறி அருகில் இருந்த தொகுப்பாளரின் கையை பிடித்துக்கொண்டார்.

நடுக்கம் சக்திவாய்ந்ததாக இருக்க சாரா டான்சே காத்திருக்காமல், நாற்காலியிலிருந்து வெளியேறி, உயிர் பிழைக்க ஒழுக்கமாக மேசைக்கு அடியில் சென்று மறைந்துக்கொண்டார். தொகுப்பாளியின் இச்செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...