கலிபோர்னியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கொத்துக் கொத்தாக செத்து விழுந்த தேனீக்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியா நகரம் முழுவதும் கொத்துக் கொத்தாக தேனீக்கள் செத்து விழுந்துள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிஃபோர்னியா நகரில் வெள்ளியன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 என பதிவான இந்த நிலநடுக்கமானது சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறை என கூறப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த எரிவாயு குழாய்கள் அனைத்தும் பாதிப்புக்கு உள்ளானது.

மட்டுமின்றி பல இடங்களில் தீ விபத்தும் ஏற்பட்டது. ஆனால் பொதுமக்களுக்கு எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் கலிபோர்னியா நகரம் முழுவதும் கொத்துக் கொத்தாக ஆயிரக்கணக்கான தேனீக்கள் செத்து விழுந்துள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து கலீல் அண்டர்வுட் என்பவர் தமது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளதுடன், மில்லியன் கணக்கில் தேனீக்கள் செத்து விழுவதின் காரணம் என்னவாக இருக்கும் என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது நிலநடுக்கத்தின் பின்னர் ஏற்பட்டதே என அழுத்தமாக தெரிவிக்கும் கலீல் அண்டர்வுட், உண்மையில் அடுத்து ஏற்படவிருக்கும் பேரழிவின் முன்னறிவிப்பா எனவும் வினவியுள்ளார்.

கலீல் அண்டர்வுட் பதிவுக்கு பதிலளித்துள்ள பலரும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட காந்த விசை காரணமாகவே தேனீக்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுந்திருக்கலாம் எனவும்,

பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் தேனீக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

தைவான் நாட்டில் ரிக்டர் அளவில் 7.3 மற்றும் 6.8 என நிலநடுக்கம் உலுக்கியதன் பின்னர் இதே போன்று வண்டுகள் மற்றும் தேனீக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்