கப்பலில் குழந்தைக்கு விளையாட்டு காட்டி கொண்டிருந்த தாத்தா: கால் தடுக்கியதால் நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சுற்றுலா சென்ற இடத்தில், கப்பலின் 11ஆவது தளத்தில் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த ஒரு தாத்தாவின் கையிலிருந்து தவறி கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இண்டியானாவைச் சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுலாப்பயணமாக கப்பல் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தது.

அந்த கப்பல் Puerto Ricoவில் நின்று கொண்டிருந்தபோது, அந்த குடும்பத்தின் 19 மாத குழந்தையை தனது கையில் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார் அதன் தாத்தா.

http://www.primerahora.com/videos/autoridadesexplicanlosucedidoenelincidenteenelcrucerofreedom-256243/

அப்போது பலத்த அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சக பயணிகள் குழந்தை 150 அடி உயரத்திலிருந்து விழுந்து தரையில் மோதி இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அந்த முதியவர் குழந்தையை ஜன்னலுக்கு வெளியே ஊஞ்சலாட்டுவது போல ஆட்டியதால் அந்த குழந்தை விழுந்ததா, அல்லது அவர் தடுக்கி விழும்போது அவரது கையிலிருந்த குழந்தை தவறி ஜன்னலுக்கு வெளியே விழுந்ததா என்பது தெரியவில்லை.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை.

அந்த குழந்தையின் குடும்பம் முழுவதுமே அதிர்ச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், பொலிசார் CCTV கெமராக்களை பெற்று அவற்றின் மூலம் விசாரணை மேற்கொள்ள முயன்று வருகிறார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...