தாத்தா கையிலிருந்து தவறி விழுந்து இறந்த குழந்தை: புகைப்படமும் விவரங்களும் வெளியாகின!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நேற்று முன் தினம் கப்பலில் வேடிக்கை காட்டிக் கொண்டிருந்த தனது தாத்தாவின் கையிலிருந்து தவறி விழுந்த குழந்தையின் புகைப்படம் வெளியாகியுள்ளதோடு அவளது குடும்பம் குறித்த கூடுதல் விவரங்களும் வெளியாகியுள்ளன.

Puerto Ricoவில் நின்று கொண்டிருந்த கப்பலின் 11ஆவது தளத்தில் அமைந்துள்ள உணவகத்தின் ஜன்னல் ஒன்று திறந்திருக்க, அதில் தனது பேத்தி Chloe Wiegandஐ உட்கார வைத்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்திருக்கிறார் அதன் தாத்தாவான Salvatore Anello.

அப்போது Salvatore தற்செயலாக நிலைதடுமாற, அவரது கையிலிருந்த Chloe தவறி 150 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்திருக்கிறாள்.

கப்பல் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை ஒட்டி அமைந்திருந்த சிமெண்ட் தரையில் மோதியிருக்கிறாள் Chloe.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்திருந்ததால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை.

Chloeவின் தந்தையான Alan Wiegand இண்டியானாவில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வருபவராவார்.

Chloeவின் தாயின் பெயர் Kimberly Schultz Wiegand.

Chloeவின் தாத்தா பாட்டிகள், தூரத்து உறவினர்கள் என மொத்த குடும்பமும் சுற்றுலா செல்ல முடிவு செய்திருந்த நேரத்தில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததையடுத்து, சுற்றுலா செல்ல முடியாமலே போய்விட்டது அந்த குடும்பத்திற்கு!

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்