அமெரிக்காவில் பரவும் ஐஸ்கிரீம் நக்கும் கலாச்சாரம்: இன்னொரு வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

சமீபத்தில் அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் ஐஸ்கிரீம் கண்டெய்னர் ஒன்ரை எடுத்து நக்கிவிட்டு மீண்டும் அதை மூடி ப்ரீஸருக்குள் வைத்துச் சென்ற வீடியோவை, தொடர்ந்து தற்போது அதுபோன்ற மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

குறிந்த அந்த பெண்ணி செயல்பாட்டுக்கு, அமெரிக்காவில் உணவுப்பொருட்களுடன் விளையாடுவது குற்றம் என்பதால் அந்தப் பெண்ணை பொலிசார் கைது செய்யும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில், அந்த பெண்ணை காப்பியடிக்கும் வகையில் வேறு சிலரும் அதேபோன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

அதில் ஒன்றுதான், Louisianaவில் நபர் ஒருவர் ஐஸ்கிரீம் கண்டெய்னரைத் திறந்து நாவால் நக்கியதோடு, ஒரு விரலாலும் கொஞ்சம் ஐஸ்கிரீமை எடுத்து நக்கிவிட்டு மீண்டும் அதை மூடி ப்ரீஸருக்குள் வைத்து விட்டார்.

அவரது வீடியோவும் வெளியான நிலையில், பயந்துபோன Lenise Martin III (36) என்னும் அந்த நபர், கடைக்கு சென்று தான் அந்த ஐஸ்கிரீமை வாங்கி விட்டதாக கூறி ஒரு பில்லையும் கொடுத்துள்ளார்.

என்றாலும் கடைக்காரர்கள் பொலிசாருக்கு தகவல் அளிக்க, ஏற்கனவே அவர் வீட்டுக்கு சென்று அவரைத் தேடிய பொலிசார், அவர் அங்கு இல்லாததால், கடைக்கு வந்துகொண்டிருந்த நிலையில், கடையிலிருந்த Martinஐக் கைது செய்தனர்.

குற்றச்செயல் ஒன்றை பதிவேற்றம் செய்ததாகவும், உணவை சேதப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இதுபோன்ற செயல்களை காப்பியடிக்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ள பொலிசார், அது சட்ட விரோதம், மட்டுமல்ல, மற்றவர்களில் ஆரோக்கியத்திற்கும் அபாயம் விளைவிக்கும் ஒரு செயல், யார் அதைச் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளனர்.

Martin தான் சேதப்படுத்திய ஐஸ்கிரீமை வாங்கி விட்டார் என்பது உண்மைதான், அது அந்த கடையில் இல்லை, என்றாலும் அவர் குற்றம் செய்தது செய்ததுதான் என்கின்றனர் பொலிசார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்