நெடுஞ்சாலையில் அதிசயம்..! உயிரை பணயம் வைத்து பணத்தை அள்ளிய மக்கள்: காத்திருக்கும் அதிர்ச்சி

Report Print Basu in அமெரிக்கா

அமெரிக்க நெடுஞ்சாலையில் கொட்டி கிடந்த பணத்தை, வாகன ஓட்டுநர்கள் போட்டி போட்டு உயிரை பணயம் வைத்து அள்ளிய சம்பவம் வீடியோவாக வௌயாகி உள்ளது.

அமெரிக்க நகரமான ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள I-285 நெடுஞ்சாலையிலே இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தை அவ்வழியாக சென்ற 35 வயதான மைக் பாஸ் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், நெடுஞ்சாலையில் கொட்டி கிடக்கும் பணத்தை கண்ட வாகன ஓட்டுநர்கள், வாகனங்களை சாலை ஓரம் நிறுத்தி விட்டு, அபாயகரமாக நெடுஞ்சாலையின் நடுவே இருக்கும் பணத்தை எடுக்கின்றனர்.

இதுகுறித்து கூறிய மைக் பாஸ், நெடுஞ்சாலையில் குப்பைகள் பரப்பதை கண்டேன். பின்னர், பல வாகன ஓட்டிகள் அதை ஓடி ஓடி பிடிப்பதை பார்த்தவுடன் அது பணம் என்று அப்போது தான் எனக்கு தெரிந்தது. உடனே எனது போனை எடுத்து வீடியோ எடுத்தேன்.

சாலையில் கிடக்கும் பணத்தை எடுப்பது திருட்டு என நான் படித்துள்ளேன். அதனால், நான் அதை எடுக்க விரும்பவில்லை என மைக் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், அவ்வழியே சென்ற பாதுகாப்பு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பணம், ஜன்னலின் வழியே பறந்ததாக தெரிவித்துள்ளனர். சுமார், ஒரு லட்ச டாலருக்கும் அதிகமான பணம் பறந்திருக்கும் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க சட்டத்தின் கீழ், இழந்த சொத்தை கண்டுபிடிப்பவர்கள் அந்த சொத்தின் உரிமையாளர் கோருவதற்கு முன்பு, உரிமையாளரை கண்டுபிடிக்க நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜார்ஜியா சட்டத்தின் கீழ்,பணத்தை எடுத்தவர்கள் மீது தவறான சொத்தை திருடியதாக குற்றம் சாட்டப்படலாம். ஆனால், பணத்தை எடுத்தவர்கள் மனசாட்சி படி ஒப்படைக்குமாறு பொலிசார் அழைத்திருக்கிறார்கள்.

சரியானதைச் செய்யும் எவரையும் நாங்கள் கைது செய்யவோ, குற்றஞ்சாட்டவோ மாட்டோம் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers