தாயை கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய மகன்கள்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் தங்களுடைய அம்மாவை கொலை செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் வைத்து தாக்குதல் நடத்திய சகோதரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது முன்னாள் காதலியான எலிசபெத் பிளெட்ஜரை, காரில் ஏற்றி சென்று 2017 ஆம் ஆண்டில் சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்டதை அடுத்து டேல் வில்லியம்ஸுக்கு வியாழக்கிழமை தண்டனை விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

வழக்கின் போது ப்ளெட்ஜரின் சகோதரி தனது அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயாரானார். அப்போது அத்தையுடன் அமர்ந்திருந்த ப்ளெட்ஜரின் மகன்களுள் ஒருவரான அந்தோனி டீஸ் (30) மேசையின் மீது ஏறிக்குதித்து, வில்லியம்சை தாக்க முயன்றார்.

உடனே அங்கிருந்த அதிகாரிகள் அந்தோணியை கட்டுப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அவர்களிடம் இருந்து விடுபட்டு வில்லியம்சை தாக்கும் முயற்சியில் அந்தோணி தொடர்ந்து ஈடுபட்டார்.

அவரது தம்பி, ஜெரோம் ஸ்டூவர்ட் டீஸ் (23) நீதிமன்ற அறையில் எடுக்கப்பட்ட வீடியோவில், அதிகாரிகளைச் சுற்றி ஓட முயற்சிப்பதும், தாக்குதலில் தானும் சேர முயற்சிப்பதும் தெரிகிறது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்த நிலையில், மின்சார துப்பாக்கியை பயன்படுத்தி பொலிஸார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் சகோதரர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு, தவறான நடத்தை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக வில்லியம்ஸின் தண்டனை திங்கள்கிழமைக்கு மாற்றப்பட்டது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers